சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் கைது

விசா காலம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் இருவர் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (18) மாலை மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்இ சந்தேக நபர்கள் இன்று (19) கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply