மன்னாரில் கடலாமை உயிருடன் மீட்பு: கைவசம் வைத்திருந்தவர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூன்றாம் பிட்டி கிராம பகுதியில் உள்ள வீடொன்றில் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலாமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 கிலோவுக்கும் அதிகமான எடையுடய குறித்த கடலாமை இன்று (12) வியாழக்கிழமை காலை இலுப்பைக்கடவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்த பொலிஸார் குறித்த கடலாமைனை உயிருடன் மீட்டுள்ளனர்.

இதன் போது குறித்த கடலாமையை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (42 வயது) மூன்றாம் பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிருடன் மீட்கப்பட்ட குறித்த கடலாமையை, வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply