ஜனாசுகிர்தனின் உலகசாதனை கல்முனையில் இடம்பெற்றது!

பல்வேறு கைப்பணி பொருட்களை உருவாக்கி பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் வசிக்கும் எஸ். ஜனாசுகிர்தன் மரத்தினால் மிகச்சிறிய சிவலிங்கத்தை உருவாக்கும் உலகசாதனை முயற்சி 17.01.2022 அன்று இடம் பெற்றது.
இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சோளன் உலக சாதனை புத்தக அமைப்பின் ஏற்பாட்டில் சேனைக்குடியிருயில் அமைந்துள்ள விதாதா நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த சாதனை முயற்சியில் 0.6 cm மிகச்சிறிய அளவில் 26.10 நிமிடத்தில் சிவலிங்கம் உருவாக்கி இந்த சாதனை முயற்சி சோளன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி. எம் றிம்ஸான், பிரதேச கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன் மற்றும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கல்முனை இணைப்பாளர் சாந்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







