மன்னாரில் சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும்!

மன்னார் மாவட்ட செயலக அலுவலர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் அலுவலர் நலன்புரி சங்கத்தின் தலைவரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளருமான கே. திலீபன் தலைமையில்; நடைபெற்றது.

நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் , பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர்களும் , முப்படை அதிகாரிகளும், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் இயற்கை முறையில் விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் 5 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு  மதிப்பளிக்க பட்டனர்.

மேலும் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகையும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *