
இலங்கை அரசு மீது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணை இருக்கும் போது எவ்வாறு உங்களை நம்பி முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் கிரியெல்ல சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று ஜனாதிபதி கூறினார். முதலீட்டார்களை இங்கு அழைப்போம், பொருளாதாரத்தை வளர்ப்போம் என்று.
அரசு மீது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணை இருக்கும் போது யாரை நம்பி அவர்கள் இங்கு வருவார்கள்.
இந்த அரசு பற்றி எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். யாரும் உங்களை நம்பி இங்கே வர மாட்டார்கள். – என்றார்.
தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை! – கம்மன்பில

