காணாமல் போயுள்ள சிறுவனை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, பன்விலை – கல்பீலி தோட்டத்தைச் சேர்ந்த க.பீரபாகௌசல்யன் என்ற 16 வயது சிறுவன் ஒருவரே, இந்த மாதம் 7ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு சிறுவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் பெற்றோர் பன்விலை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் கற்றல் வேலைக்காக தேசப்படம் ஒன்றை வாங்க பன்விலை நகருக்குச்சென்ற போதே, காணாமல் போயுள்ளதாக இவரது தந்தை தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த சிறுவன் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், 071-9043533 இலக்கத்திற்கு அறியத்தருமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.