பயந்து விட்டீர்களா – முதல் நாள் அமர்விலேயே எதிர்க்கட்சி விளாசல்

என்ன காரணத்துக்காக பாராளுமன்ற அமர்வை மேலும் ஒருவாரம் ஒத்திவைத்தீர்கள், என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் கிரியெல்ல சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வருடம் பாராளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கும் போது ஜனவரி 12 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டது. ஆனால் அதன் பின்னர் 18 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இது எதற்காக? ஏற்கனவே கொரோனா காரணமாக பல சபை அமர்வுகள் நடைபெறவில்லை.

இப்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு கதைக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

உங்கள் எண்ணத்துக்கு சபையை நீண்ட காலம் நீங்கள் ஒத்தி வைத்துள்ளமை,உங்களுடைய பயம் மற்றும் இயலாமையை காட்டுகிறது – என்றார்.

தயவு செய்து சபையில் கெட்ட வார்தைகள் பேச வேண்டாம்! சபாநாயகர் கோரிக்கை

Leave a Reply