காணாமல்போன மீனவர்கள் இருவர் சடலமாக மீட்பு

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

09வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே இன்று (18) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவினத்தில் சுமார் 20% கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70% வாகனங்களுக்கு எரிபொருளாகவும், 21% மின்சாரம் தயாரிக்கவும், 4% மட்டுமே தொழில்துறை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் போது, ​​மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் போது இலங்கை முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்த திட்டமிட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.

அத்துடன், தற்போது நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *