
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலையில் உள்ள போது ,அதற்கு தீர்வு தராத உரையாகவே ஜனாதிபதி கோட்டாவின் கருத்து உள்ளது என நாடளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாடு இப்போது எங்கே செல்கிறது என அனைவருக்கும் தெரியும்.
நாட்டின் ஜனாதிபதியின் உரை எவ்வாறு அமைய வேண்டும்.பிரச்சினைக்கு தீர்வு அல்லது வழி கூறக் கூடியவாறு அமைய வேண்டும்.
நேற்று அவர் அவ்வாறு ஒரு வழியை கூட தெரிவிக்கவில்லை.
ஆனால் நேற்று அவர் என்ன கூறினார், என்ன செய்தொம் என்று கூறினார்.
அதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தினோம் என்று பெருமை கூறினார்.
நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
நாட்டின் அபிவிருத்திக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு அனைவரும் தயார்.
எமக்கு முக்கிய பிரச்சினை, தமிழ் மக்களின் தீர்வுப் பிரச்சினை.
அதற்கு எந்த வழியையும் நேற்றைய உரையில் ஜனாதிபதி கூறவில்லை.
இந்த நிலையில் என்ன நோக்கத்துக்காக நாம் அவருடன் இணைய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்றார்.
ஒரு வீட்டில் 4 வாகனம் – இது தானாம் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்! அமைச்சர் தெரிவிப்பு

