ஆட்டுக்கு குழை வெட்டச் சென்ற சிறுமி பரிதாப மரணம்: நெல்லியடியில் சோகம்!

சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்தார்.

குறித்த சிறுமி, வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போது, அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *