ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் இருளில் மக்கள் …! மின்தடை குறித்த அறிவிப்பு

களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தில் டீசல் தீர்ந்துபோவதால் இன்று புதன்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இரண்டு மின் நிலையங்கள் டீசல் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

மின் உற்பத்தி நிலையக் கோளாறு காரணமாக தேசிய மின் உற்பத்தியில் 282 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது என மின்சார சபை கூறியுள்ளது.

அதன் பிரகாரம் நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply