ஒரு வீட்டில் 4 வாகனம் – இது தானாம் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்! அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் எரிபொருள் பிரச்சினை இருந்தாலும் ,மக்கள் பலர் வீட்டிலே 4 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்துள்ளனர் என துறைமுக அமைச்சர் ரோஹித் அபேய குணவர்தன சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கோட்டபாய சிறந்த தலைவர்,அவரின் நேற்றைய சிறப்பாக உள்ளது.

நாம் எதிர்கால பிள்ளைகளுக்காகவே இப்போது தீர்மானங்களை எடுக்கின்றோம்

எதிர்க்கட்சியே நீங்கள் கண்ணாடி முன் நின்று கேளுங்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று.

நீங்கள் கடந்த காலத்தில் என்ன செய்தீர்கள் என்று எமக்கு தெரியும்.

உங்கள் எம்,பிக்களை ஹெலிகப்டரில் அழைத்து செல்ல நினைத்தீர்கள்.

இப்போது சிகிரியாவை உடைத்து அதன் கல்லை கொண்டு கொழும்பு துறைமுக அபிவிருத்தி நடைபெறும் என்று கூறினார்கள்.

ஆனால் இன்று என்ன நடந்தது?நாட்டில் எரிபொருள் பிரச்சினை இருந்தாலும் ,மக்கள் பலர் வீட்டிலே 4 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்துள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு வர போகின்றது என நினைத்து அவர்கள் தமது வாகன தாங்கியை நிரப்பினால் நாட்டிலே இந்த நிலை தான் ஏற்படும் – என்றார்.

தயவு செய்து சபையில் கெட்ட வார்தைகள் பேச வேண்டாம்! சபாநாயகர் கோரிக்கை

Leave a Reply