
வடக்கு கிழக்கு அரசியல் வாதிகளுக்கு இப்போது தான் சுடலை ஞானம் வந்துள்ளது.எதிர் காலத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் கொள்கைகளை பின்பற்றுவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதியின் உரை மக்களுக்கு ஒளி வீசுவதாக அமைந்துள்ளது.
மக்களின் நம்பிக்கையை அவர் வென்றுள்ளார்,வீணடிக்கவில்லை.
கொரோனாவுக்கு இனம் மதம் தெரியாது.அதுக்கு மனிதர்களை தான் தெரியும்.
இந்த கொடிய நிலையிலும் கோட்டபாய நாட்டை சரியாக வழி நடத்தியுள்ளார்.
இதே வேறு ஆட்சியாளர்கள் என்றால் ,இப்போது பாராளுமன்றம் கடலில் நடத்தும் அளவுக்கு கொண்டு வந்து இருப்பார்கள்.
இந்த பணிக்கு சேவையாற்றிய அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகள்.
வடக்கு கிழக்கு அரசியல் வாதிகளுக்கு இப்போது தான் சுடலை ஞானம் வந்துள்ளது.
அதுதான், வேண்டாம் என்று அன்று கூறிய அரசியல் திருத்தத்தை இப்போது வேண்டும் என்று தெரிவித்து,இந்தியாவுக்கு அறிக்கை வழங்கியுள்ளனர்.
முன்னர் இருந்த “முண்டாட்சியில் ” அவர்கள் ஒன்றையும் பெறவில்லை.ஆ
கவே எதிர் காலத்தில் ஜனாதிபதி கோட்டாவின் கொள்கை சரி என்று கூறி அவரின் பாதையில் இணைந்து பயணிப்பார்கள்.
உங்கள் அரசியல் ஆசைகளை மக்களிடம் திணிக்காமல்,எம்முடன் சேர்ந்து பயணியுங்கள் என அழைப்பு விடுகின்றேன் – என்றார்
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி

