
நாட்டுக்கு புத்த பெருமான் வந்தாலும் ,கோட்டாவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் கோட்டபாயவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
புத்த பெருமான் வந்தாலும் இவரால் அதை செய்ய முடியாது.மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாத ஜனாபதியின் உரையை நாங்கள் ஏற்கவில்லை.
புலிப்பூச்சாண்டி காட்டி ஆட்சிக்கு வந்த ராஜ பக்சாக்கள் இன்று வரை ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு காணவில்லை.
இவர்களால் ஒன்றுமே செய்ய முடியயாது.இனங்களுக்கும் இடையே காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலே ஏனைய விடயங்கள் வந்து சேரும்.
அதை விடுத்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை எவ்வாறு அழிக்கலாம் என்று நினைத்தால் நாடு இப்படியே தான் செல்லும் என்றார்.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி
சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

