யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரைநகர் சாலைக்குச் சொந்தமான 784 வழித்தடப் பேருந்தே இன்று (12) காலை 8.15 மணியாளவில் கல்லுண்டாய் பகுதியில் தடம்புரண்டது.
வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் வேகமாக வந்த பஸ், இன்று காலை பெய்த மழை காரணமாக சறுக்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்களில் 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


