புதிதாக பதவியேற்கும் கோட்டபாய – நேற்று கன்னி உரை ஆற்றினார் !

கோட்டபாய தன்னை தானே மறந்து,புதிதாக பதவியேற்ற ஜனாதிபதிய என இப்பொது தான் உணர்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு வந்து ஒரு கொள்கை அறிக்கையை சமர்பித்தார்.

அதைக் கேட்கும் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி உரை நிகழ்த்துவது போல் உணர்ந்தேன்.

ஜனாதிபதி பதவிக்கு வந்து பாதியிலேயே இதைச் செய்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை.

தான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் ஆகிறது ஆனால் தான் செய்தது ஆரம்பப் புள்ளியாகத் தேவையானதைச் செய்யவில்லை.

இரண்டு வருடங்கள் கடந்தும் தற்போதைய பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்படவில்லை.இது ஒரு அழகான கதை மாத்திரமே.

ஆனால் வாழும் மக்களின் பிரச்சிணைகளுக்கு இது மட்டும் பதில் இல்லை.நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்து கேள்விகளுக்கு பதில் இல்லை.மின்சாரம் கிடைக்காமல் உள்ளது.

அடுப்பு பற்றவைக்க முடியாமல் கேஸ் பற்றாக்குறை உள்ளது.உரம் இழப்பால் விவசாயம் அழிந்துள்ளது.ஆனால் இத்தகைய விடயங்களுக்கு தீர்வாக அந்தக் விளக்க உரை பதிலாக விளங்கவில்லை.

இலங்கை தற்போது இரண்டு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது, ஒன்று பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள துரித அதிகரிப்பு.ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள துரித அதிகரிப்பு.இன்று பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பாகும்.

இரண்டாவது பிரச்சனை, டொலர் தட்டுப்பாடு ஆகும்.இதனால் டொலர் தட்டுப்பாடு இருப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொடுக்க வழியில்லாமல் போகிறது.

மேலும் மருந்துகளுக்கு பணம் செலுத்த வழியில்லை.மருந்துகளுக்கான மொத்த தேவையில் 25% இலங்கை உற்பத்தி செய்கிறது.மேலும் 25% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஏனைய நாடுகளில் 50% வீதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. தவிர்க்க முடியாத அத்தியாவசிய மருந்துகளும் உள்ளன.இவற்றுக்கு ஜனாதிபதியின் உரையில் பதில் இல்லை என்றார்.

நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி

தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி

சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *