
நாங்கள் எண்ணெய் தரமுடியாது என்று இல்லை எங்களிடம் உண்மையில் எண்ணெய் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதயன் கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மின்சார சபையிற்கு எண்ணெய் வழங்காமையால் மின் வெட்டு ஏற்படுகிறது என மின்சார சபை குற்றச்சாட்டை வைத்துள்ளது.
உண்மையில் டிசம்பர் மாதங்களில் 60%மின்சார உற்பத்தி, நீரை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டது.
மின்சார சபை கோரிக்கையானது ஜனவரி மாதம் 11 திகதி ,எண்ணெய் முடிவடைந்தது விட்டது 13ம் திகதி எங்களுக்கு எண்ணெய் பெற்று தரும்படி,
இதற்கு முன்னர் எங்களிற்கு பெப்ரவரி மாதம் அளவிலே எண்ணெய் தேவைபடுகிறது என்று முன்பு கூறியிருந்தனர்.
இங்கு நாங்கள் எண்ணெய் தரமுடியாது என்று இல்லை, எங்களிடம் உண்மையிலேயே எண்ணெய் இல்லை.
மின்சார சபை நம்மிடம் டீசல் மெட்ரிக் தொன் அளவு கேட்டு இருந்தனர்.
அவர்கள் கேட்டவுடன் வழங்க எம்மிடம் டீசல் இல்லை வெளி நாட்டிடம் கோர வசதிகளும் இல்லை.
போக்குவரத்திற்கான டீசலை வழங்கினால், நாட்டில் போக்குவரத்திற்கான பாரிய பாதிப்பொன்று ஏற்படும்.
மணித்தியாலத்தில் மின் துண்டிப்பை விட போக்குவரத்திற்கு டீசல் வழங்குவது பாதிப்பான செயலாக அமையும்.
அவசரமான சந்தர்ப்பங்களில் பயணித்துகொள்ள முடியாது.
எனவே மின்சார சபையிற்கு முடியும் மின்சாரத்தை கட்டுப்படுத்த முடியும் ஆனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாது.
மின்சாரத்தை சிக்கனமாக அதாவது 1 மணித்தியாலம் துண்டித்தால் 2மாத காலத்திற்குள் எண்ணெய் பெற்று கொள்ள முடியும் .
அதேபோல மழை காலங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும்.
24மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்ட மக்களிற்கு 3 மணித்தியாலம் தடைபடுவது சிக்கலான விடயம்.
இதேவேளை, ஒவ்வொரு நாளும் 1 மணித்தியால மின்சார துண்டிப்பு நாட்டு மக்களுக்கு சமாளிக்க கூடிய விடயம் என்றார்.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி
சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

