ஜனாதிபதி தலைமையில் அவசர சந்திப்பு?

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற கொரோனா நிலைமை தொடர்பில் அவசர சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நடக்கின்றது.

குறித்த சந்திப்பு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முன்னதாக, சுகாதார தரப்பினர்கள் நாட்டை சில நாட்களுக்கு முடக்கி கொரோனாவை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இதேவேளை, இக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply