சீனாவிற்கு எதிராக ஜப்பானுக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

அதிகரித்து வரும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக ஜப்பானுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் செய்வதற்கு முன்வந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா ஜப்பான் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பு கூட்டுறவுகளை அதிகரித்துக் கொள்வதற்கு உறுதியளித்துள்ளது.

குறிப்பாக இரண்டு நாடுகளின் ஆயுதங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும் விதமாக பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன.

தற்போது ஜப்பானின் தெற்குத் தீவு உட்பட ஜப்பான் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா பல ஆயுதங்களை குவிப்பதற்கு தயாராக உள்ளதாக இரண்டு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளும் சீனாவிற்கு எதிராக பாதுகாப்பு பலத்தை அதிகரிப்பதற்கு ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *