மின்சாரம் இன்று துண்டிக்கப்படாது! வெளியானது அறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்கள் நேற்றுமுன்தினம் மூடப்பட்டது.

எனினும், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு 10,000 மெட்றிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்த மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

இலங்கை கடற்படை மோதி தமிழக மீனவரின் படகு மூழ்கியது!

Leave a Reply