இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்கள் : யூடியூப் சேனல்கள் மீது சட்டநடவடிக்கை!

<!–

இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்கள் : யூடியூப் சேனல்கள் மீது சட்டநடவடிக்கை! – Athavan News

இந்தியாவிற்கு எதிராக சதி திட்ட செயல்களில் ஈடுபடும் இணையத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பியதாகக் கூறப்படும் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினை, இந்திய இராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் போலி செய்திகள் பரப்பப்படும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply