தனுஷ் , ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை – கஸ்தூரி ராஜா

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின்  விவாகரத்து குறித்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தனுஷும், ஐஸ்வர்யாவும், கருத்து வேறுபாடு காரணமாக சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதாகவும், விவாகரத்து செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இருவருமே ஹைதராபாத்தில் இருப்பதால் சமரசம் செய்யும் முயற்சியில் இரு குடும்பமும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply