நல்லூர் கொடியேற்றத்துக்கு கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா நாளை (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று(12) அதற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது.

முன்னதாக, யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு விஷேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை மாட்டு வண்டிலில் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், வெளிவீதி உலாசென்று, கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply