முதலில் வீட்டு சமையல் அறைக்கு பாதுகாப்பு கொடுங்கள் – பின்னர் நாட்டுக்கு கொடுக்கலாம்

நாட்டை பாதுகாப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் இப்போது ஒரு சமையலறையை பாதுகாக்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை,யானை விளாம்பழத்தை விழுங்கியது போல இருந்தது.

கட்டடங்கள் உயர வேண்டிய நேரத்தில் இன்று சீமெந்தின் விலை உயர்ந்து செல்கிறது.மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

வீட்டில் எரிவாயு வெடிப்பு ஏற்படுகிறது.அதில் சுமார் 7 பேர் இறந்தும் உள்ளனர்.அவர்களுக்கு தீரவில்லை.

இந்த நிலையில் எல்லாம் சரியாக நடைபெறுகிறது என்பது போல ஜனாதிபதி நடந்து கொள்கின்றார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் சமையல் அறையை கூட பாதுகாக்க வில்லை என்றார்.

Leave a Reply