மேலும் 2,420 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2 ஆயிரத்து 420 பேர் இன்றைய தினம் (12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 49 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply