சுதந்திரக் கட்சிக்கு நாமல் விடுத்துள்ள கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அவை அமைச்சரவைக் கூட்டத்திலோ, அரச கட்சிக் கூட்டத்திலோ அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்திலோ மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தற்போதைய நிர்வாகம் முன்னோக்கிச் செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தனிநபர்கள் ஆட்சி செய்வதற்காக பொது மக்கள் வாக்களிக்கவில்லை என்றும், தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவரின் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்படுமாயின் பிரஜைகள் அறிவார்கள். அரச அரசியல்வாதிகள் என்ற வகையில் கருத்துக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விருப்பம் எனவும் மேலும் தெரிவித்தார்

Leave a Reply