இலங்கைக்கு ஒத்துழைக்க தயார்! தென் கொரிய சபாநாயகர்

இலங்கையின் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும்.

இவ்வாறு தென் கொரிய தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் (Pயசமடீலநழபெ-ளுநரப) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் பார்க் பியோங்-சியோக்குமிடையில், சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க் பியோங்-சியோக்கிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஏறக்குறைய 22,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் தொழில் புரிவதுடன், அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் உயர் தொழில் பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.

இலங்கையின் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் கொரிய அரசாங்கத்தின் உதவிகளை வழங்குவதற்கும் தென் கொரிய சபாநாயகர் உடன்பட்டதுடன், இந்த நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண இரத்த வங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *