மருத்துவர் இல்லை – மூடப்பட்டது வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பதில் மருத்துவர் இன்மையால் நோயாளார்கள் இன்று திரும்பிச் சென்றுள்ளானர்.

குறித்த வைத்தியசாலையில் பதில் கடமை புரிவதற்கு மருத்துவர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 21,22,23 திகதிகளில் வெளி நோயாளர் பிரிவு செயற்படாது, நோயாளர்கள் வருகை தர வேண்டாம் என அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது டெங்கு , காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கும் அளவு அதிகரித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் பயன்படுத்தும் இந்த வைத்தியசாலை மூடப்பட்டுள்ளமையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்! தொடரும் அவலம்

Leave a Reply