யாழில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது யாழ். குருநகர் கடற்கரையில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை மீன்பிடிப்பதற்காக மூன்று மீனவர்
சென்றுள்ளள்ளனர்.
மேலும் மூன்று மீனவர்கள் சென்றுள்ள நிலையில் இரணைதீவு பகுதியில் படகு கவிழ்ந்துள்ளது என கூறப்படுகின்றது
அதில் இரு மீனவர்கள் நீந்தி இன்று வியாழக்கிழமை மாலை கரைக்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு மீனவரை இதுவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.