அடுத்த இரண்டு வாரங்களில் டெல்டா வைரஸ் மிக தீவிரமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே அனைத்து மக்களும் இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் முடிந்தவரை தங்கள் வெளி செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சந்திம ஜீவந்தர கூறுகிறார்.
மக்கள் தங்களை தாங்களே (lockdown) கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
Advertisement
ஒரு நபர் உணவை இழந்தால்இ வேறு யாராவது அதை அவருக்குக் கொடுப்பார்கள்இ ஆனால் ஆக்ஸிஜனை இழந்தால் என்ன நடக்கும் என்று சிந்திக்குமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
டெல்டா வைரஸின் விளைவுகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை விட டெல்டா இரண்டு மடங்கு வேகமாக பரவுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கஇ இந்த நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.