கோப்பாய் சந்தியில் இன்று இரவு விபத்து சம்பவமொன்று இடம்பெற்றது.
மேலும் இந்த விபத்து இன்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாரவூர்தியொன்று கட்டுப்பாட்டை இழந்து, ஒளிச்சமிக்ஞை விளக்கு கம்பத்தை மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இவ் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரனை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.