பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சேவைகளினை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்றையதினம் பங்குதாரர் செயலமர்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சேவைகளினை சமூகசேவை திணைக்களம் ஊடாக பெண் மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர் தசரதனால் குறித்த செயலமர்வு புதுக்குடியிருப்பு விழுது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச் செயலமர்வில் கொரோனா தொற்று காலத்தில் தலைமை தாங்கும் பெண்குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகசேவை திணைக்களத்தினால் பொதுமக்களுக்காக வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளிக்கபட்டுள்ளது.
மேலும் குறித்த செயலமர்வில் இளையோர்கள், மாற்றுத்திறனாளிகள், சமாச, அமரா ஒன்றியத்தின் சார்பாக பெண் பிரதிநிதிகள் மற்றும் விழுது ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.