திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணனினால் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் சிரேஷ்ர வைத்திய அதிகாரி ஏ.பி.மசூத் தலைமையில் இடம்பெற்றதுடன் குறித்த சிகிச்சை நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மோகனகாந்தன், கல்முனை பிராந்திய சுகாதார திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் மாகீர்த் மற்றும் வைத்தியசாலை உத்தியோத்தர்கள் வைத்தியசாலை நிறுவாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.
Advertisement