நாட்டை இரு வாரங்களுக்கு முடக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, சடலங்களுக்கு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் ஐ.தே.கவிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கே அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதாகவும், மாறாக சடலங்களுக்கு மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்த அவர். நாட்டு மக்களைப் பாதுக்காப்பதற்கு புத்திசாதூர்யமாக அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின்போது மக்கள் கைகளில் பணம் இருந்தது. ஆனால் பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களின் பொக்கட்டுக்களில் உள்ள பணத்தை திருடியாதாகவும் தெரிவித்தார்.
நாட்டை இரு வாரங்களுக்கு சுகாதாரத் தரப்பினர் முடக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், மக்கள் உயிரிழக்கும் வரையில் அரசாங்கம் அதனை வேடிக்கைப் பார்க்கிறது எனவும் கூறியுள்ளார்.
Advertisement
நாட்டை இரு வாரங்களுக்கு முடக்கி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்,