இன்று இதுவரையில் 3,039 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 619 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 39 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 345,118 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 563 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply