கிளிநொச்சியில் தீயில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்படும் இரு உடல்கள் சற்று முன்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புன்னை நீராவி நாதன் திட்டம் பகுதியில் வசிக்கும் தாயும் மகளுமே இவ்வாறு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தர்மபுரம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply