தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இந்த தம்பதிகளின் புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் பிரசன்னா – சினேகா நட்சத்திர தம்பதியின் மகன் விஹானுக்கு நேற்று பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடியுள்ளார்.
தற்போது புகைப்படங்களை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.