
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையை திறந்துத் தருமாறும் நிரந்தர வைத்தியரொருவரை நியமித்துத் தருமாறு கோரி இன்று புத்தளம் கரைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கரைத்தீவு மற்றும் சேராக்குழிய பகுதைச் சேர்ந்த 70 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
சுமார் 80 வருட பழைமை வாய்ந்த வைத்தியசாலையில் நிரந்தரமான வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் தாம் சிரமங்களுக்கு உள்ளாகிவருவதாகவும் குறித்த பகுதியில் கடந்த அரசாங்கத்தினால் 2 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் சகல வசதிகளைக் கொண்ட வைத்தியசாலையொன்று நிர்மானிக்கப்பட்டு மூன்று வருடங்களாகியும் இதுவரையிலும் வைத்தியசாலை திறக்கப்படவில்லயெனவும் ஆர்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுகயீனம் அற்றவர்களை வைத்திசாலைக்கு அழைத்து செல்வதென்றால் வண்ணாத்திவில்லு வைத்தியசாலைக்கு சுமார் 10 கிலோமீற்றர் வரை சென்று மருந்துகளைப் பெறுவதாகவும், மேலதிக சிகிச்சைகளுக்காக சுமார் 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு செல்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த வைத்தியசாலையைத் திறந்துதருமாறும் நிரந்தர வைத்தியரொவரை நியமித்துத் தருமாறு கூறியும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


