இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவு: புதிதாக 3,039 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 156 பேர், உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று, 3 ஆயிரத்து 039பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  3 இலட்சத்து 45ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 563 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 93ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *