விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழக்க முன்னர் தனது சிறுநீரகங்களை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
இணுவில், தியேட்டர் வீதியை சேர்ந்த 29 வயதுடைய பிரிஞ்சன் எனும் இளைஞரே இவ்வாறு சிறுநீரகங்களை தானம் செய்தவராவார்.
இணுவில் – மருதனார்மடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சையில் பலனின்றி நேற்றைய தினம் (12) உயிரிழந்திருந்தார்.
எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக சுயவிருப்பின் பேரில் தனது சிறுநீரகங்களை தானம் செய்திருந்தார்.