நல்லூர் ஆலயத்தின் நுழைவாயில்கள் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் (13) ஆரம்பமாகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வரும் அடியவர்களுக்கு சுகாதார கட்டுப்பாடுகள் சார்ந்த அறிவுறுத்தல்கள் கடந்த நாட்களில் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த சுகாதார நடவடிக்கைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் பெருமளவு பொலிஸாரும், சுகாதார பிரிவினரும் ஆலய வளாகத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆலயத்திற்கு செல்லும் அடியார்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

