நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸாருடன் முறுகல்: வீதியில் சிதறு தேங்காய் அடித்த பக்தர்கள்

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பக்தர்கள் நுழைய, பொலிஸார் அனுமதிக்காத காரணத்ததால் கொண்டு வந்த சிதறு தேங்காய்களை வீதியிலேயே அடித்து விட்டு சென்றுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவின் பேரில் பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆலய வளாகத்தினுள் நுழையாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுத்தமையால், வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும், நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, பொலிஸாருக்கு முன்பாக வீதியில் உடைத்து, வீதியில் கற்பூரம் கொளுத்தி, நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி, வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *