அக்கரைப்பற்றில் போதை மாத்திரை வியாபாரிகள் இருவர் 5 ஆயிரம்  மாத்திரைகளுடன் கைது!

(கனகராசா சரவணன்)

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரை குளிசைகளுடன் இருவரை புதன்கிழமை (11) இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையனருடன் இராணுவபுலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குறித்த போதை மாத்திரை வியாபாரிகளின் வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது அவர்களிடமிருந்து 5 ஆயிரம் போதை மாத்திரை குளிசைகளை மீட்டதுடன் இருவரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இரு போதை மாத்திரை வியாபாரிகளையும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரை குளிசைகளுடன் விசேட அதிரடிப்படையினர்  ஒப்படைத்துள்ளதாக தெரிவித்த பொலிசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

Leave a Reply