தமிழக சட்டசபை கூட்டம் : அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து உரையாற்றினார்.

இருப்பினும் இதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததுடன், திங்கட்கிழமை விவாதம் நடைபெறும் எனவும், அதன்போது உரையாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சபையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *