கிளிநொச்சியில் பார ஊர்தி தடம் புரண்டு விபத்து!

கிளிநொச்சி – இத்தாவில் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சீனி மூடைகளை ஏற்றிக்கொண்டு ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தியே விபத்தில் சிக்கியுள்ளது.

ரயர் வெடித்தமையே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

விபத்துச் சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இயற்கை உரத்தில் பயிரிடப்பட்டதா? – சஜித் கேள்வி

Leave a Reply