
கிளிநொச்சி – தருமபுரம் – புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகளின் சடலங்களை கிளிநொச்சி நீதவான் பார்வையிட்டார்.
நேற்று முன்தினம் (20) நள்ளிரவு 11 .50 மணியலவில் ஆனந்தராசா சீதேவி (47)என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான லக்சிகா (17) ஆகியோர் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக நேற்று (21) தருமபுர பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இன்று (22) சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று காலை பார்வையிட்டார்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதே வேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோலும் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபேசி என்பனவற்றை தடையில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







