எதிர்வரும் 25ம் திகதி மின்வெட்டா? மின்சக்தி அமைச்சர் கூறுவதென்ன?

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை.

இவ்வாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

25 ஆம் திகதி வரை மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

இதனிடையே, நுரைச்சோலை அனல மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் சீர்செய்ய முடியும்.

அதன் பின்னரும் தொடர்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply