நாவற்குடாவில் கோர விபத்து; தலை நசுங்கிப் பலியான சாரதி

மட்டக்களப்பு – காத்தான்குடி- நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் நெல் அறுவடை செய்யும் உழவு இயந்திரத்தினை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது மோதி உள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் மீது மோதிய உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிளின் சாரதி மேல் ஏறியதில் சாரதி இடத்திலேயே தலை நசுங்கி பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவிய நிலையில் காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உழவு இயந்திர சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலீசார முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply