நாளை மறுதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! ஆசிரியர் சங்கம்

எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து, குறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனத்தை உடனடியாக வழங்குவது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும், இந்த ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படாதுள்ளன.

இந்தநிலையில், அரசாங்கத்தினால் உடனடியாக அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சிறியரக பீப்பாய்குள் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை

நாவற்குடாவில் கோர விபத்து; தலை நசுங்கிப் பலியான சாரதி

Leave a Reply