தாய் உயிரிழந்த சோகத்தில் மகளும் தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது.
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேச பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு கிராமத்தைச் சேர்நத பாக்கியராசா மாலினி எனும் 15 வயதுடைய யுவதியே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் தாயார் உயிரிழந்ததாகவும், தான் தனது தாயை இழந்துள்ளதாகவும் அதனால் தானும் தற்கொலை செய்யப்போவதாக நீண்ட நாட்களாக குறித்த யுவதி கூறிவந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
எனினும், மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
மேலும், யுவதியின் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.